குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க புலம்பெயர்ந்தோருக்கு 2வது வாய்ப்பு வழங்கும் ஐரோப்பிய நாடு
போர்த்துக்கலில் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு ஆவணத்திற்கு விண்ணப்பிக்க இரண்டாவது வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.
கட்டணம் செலுத்தத் தவறியதால், ஒருங்கிணைப்பு, இடம்பெயர்வு மற்றும் புகலிடத்திற்கான ஏஜென்சி மூலம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட சுமார் 108,000 புலம்பெயந்தோர் இந்த சந்தர்ப்பத்தை பெறுவார்கள்.
புலம்பெயர்ந்தோர் கட்டணம் செலுத்தாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் நிலுவையில் உள்ள அனைத்து சிக்கல்களையும் தீர்க்க புதிய அழைப்பு வரும் என அமைச்சர்கள் குழுவின் தலைமைக்கான துணை செயலாளரான ரூய் அர்மிண்டோ ப்ரீடாஸ் மற்றும் ஏஜென்சியின் தலைவர் பெட்ரோ போர்ச்சுகல் காஸ்பர் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது வாய்ப்பு தேவைப்படும் 108,000 விண்ணப்பங்கள் உள்ளன. இவை விண்ணப்பிததவர்கள் நேரடியாக வருகைத்தராமை மற்றும் கட்டணம் செலுத்தாமையினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட வதிவிட விண்ணப்பங்கள் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதை சாத்தியமாக்கப் போவதில்லை என்று ப்ரீடாஸ் சுட்டிக்காட்டினார்.
காணாமல் போன ஆவணங்களை இரண்டாவது முறையாக சமர்ப்பிக்க அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.