உலகம்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆபாச நடிகை… மூன்று மாதங்களில் நான்காவது மரணம்!!

ஆபாச பட உலகின் பிரபல நட்சத்திரமான சோபியா லியோன் என்பவர் இறந்திருப்பது அந்த உலகில் சஞ்சரிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வயதுவந்தோர் திரைப்படங்களுக்கான பிரபல நட்சத்திரத்திரங்களில் ஒருவர் சோபியா லியோன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இறந்த நிலையில் அவரது குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் சோபியா லியோன் நடப்பு அமெரிக்க ஆபாச நட்சத்திரங்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவர்.

ஆபாச திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் அதில் நடிப்பது என்பது சினிமா, தொலைக்காட்சி போன்றே அங்கீகரிக்கப்பட்ட துறையாக பல நாடுகளிலும் விளங்கி வருகிறது. இதில் நடிக்க வருவோரில் பெரும்பாலானோர், சினிமா வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டது, பொய் வாக்குறுதிகளில் ஏமாற்றப்பட்டது, மற்றும் தனிப்பட்ட நெருக்கடிகள் காரணமாக அத்துறையில் நுழைவார்கள்.

Adult Star Sophia Leone Dies At 26; Death Being Investigated As Homicide

இதர திரை நட்சத்திரங்களுக்கு இணையான வருமானம் முதல் அங்கீகாரம் வரை பெறவும் செய்வார்கள். ஆனால் இளமை தீர்ந்ததும் ஆபாச படவுலகம் அவர்களை சக்கையாக தூக்கியெறிந்துவிடும். இது தவிர்த்து, ஆபாச படங்களில் முழுமையாக நடிக்க வேண்டி, போதைப் பொருட்களை உட்கொள்ளும் கட்டாயத்தில், நாளாவட்டத்தில் அதற்கு அடிமையாகவும் செய்வார்கள்.

அண்மைக்காலமாக அந்த துறையின் நட்சத்திரங்கள் பலரும் இளம் வயதிலேயே அகால மரணத்துக்கு ஆளாகி இருப்பதின் பின்னணியிலும் இந்த போதை வஸ்துக்களே காரணமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. முன்னதாக கடந்த 2 மாதங்களில் காக்னி லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா ஃபீல்ட்ஸ் என ஆபாசப்பட உலகின் 3 பிரபலங்கள் இவ்வாறு அகால மரணங்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த வரிசையில் தற்போது சோபியாவின் மரணம் நான்காவதாக சேர்ந்திருக்கிறது.

ஆபாச பட உலகில் உதிர்ந்த நட்சத்திரங்கள்

தனது 18 வயதில் வயதுவந்தோர் துறையில் நுழைந்த சோபியா லியோன், 1997-ல் அமெரிக்காவின் மியாமியில் பிறந்தவர். மாடலிங் மற்றும் திரைத்துறை வாய்ப்புகள் அவரை புறக்கணித்ததில் ஆபாச உலகம் பக்கம் திரும்பினார். அங்கே ரசிகர்கள் அவரை ஆராதித்ததில், விரைவில் உச்ச நட்சத்திரமானார். அவரை புறக்கணித்த மாடலிங் உலகம் அதன் பின்னர் சோபியாவை கண்டுகொண்டது. இதர ஆபாச பட நட்சத்திரங்களைப் போலவே, அந்த துறைக்கு தலைமுழுகி, தான் விரும்பிய மாடலிங் துறையில் தடம் பதிக்க காத்திருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பின்றி அவரது மர்ம மரணம் நிகழ்ந்திருக்கிறது.

 

(Visited 10 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content