பிரபல TikTok நட்சத்திரம் காலமானார்

டிக்டாக் சமூக வலைதளத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க பாடகி கேத்தரின் ஜானிஸ் இப்சான் காலமானார்.
அவர் டிக்டாக் சமூக ஊடகங்களில் கேட் ஜானிஸ் என்ற புனைப்பெயரில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது.
எலும்புகள் அல்லது மென்மையான திசுக்களில் ஏற்படும் புற்று நோயான “சர்கோமா” என்ற மிக அரிதான நோயினால் அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜானிஸ் இறக்கும் போது 31 வயது. கேட் ஜானிஸ் தனது பாடல்களுக்கான உரிமையை தனது ஏழு வயது மகன் லாரனுக்கு மாற்றியுள்ளார்.
அவரது மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான டான்ஸ் அவுட்டா மை ஹெட், இணையத்தில் 2 மாதங்களுக்குள் 57 மில்லியன் பார்வைகளைப் பதிவுசெய்தது, மேலும் அதிகமான ரசிகர்களிடையே அவரை நட்சத்திரமாக்கியது.
(Visited 10 times, 1 visits today)