பொழுதுபோக்கு

வேறு வழியே இல்லை! 40 வயது நடிகையுடன் சேர்ந்தார் தனுஷ்

தனுஷ் இயக்கி, நடிக்க உள்ள டி50 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிர்பல பாலிவுட் நடிகை மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் விரைவில் முடிய உள்ளது.

ஷூட்டிங் முடிந்ததும் பின்னணி பணிகளை வேகமாக முடித்து படத்தை வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக தனது 50-வது படத்தில் கவனம் செலுத்த உள்ளார். அப்படத்திற்கு தற்காலிகமாக டி50 என பெயரிடப்பட்டு உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் அப்படத்தை தனுஷ் தான் இயக்கவும் உள்ளார். இப்படம் வட சென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும், அநேகமாக இது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறம் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய தகவலும் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நடிகை திரிஷா தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கொடி படத்துக்கு பின்னர் தனுஷும், திரிஷாவும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர்.

இப்படத்தில் தனுஷ் முதன்முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க விரும்பியது திரிஷா இல்லையாம். அவருக்கு முன்னர் நடிகர் கங்கனா ரனாவத்தை தான் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க தனுஷ் விரும்பினாராம்.

ஆனால் கங்கனா வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன்பின்னர் தான் திரிஷாவை கமிட் செய்துள்ளார் தனுஷ். நடிகை கங்கனா தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!