அமெரிக்காவின் முடிவால் பாதிக்கப்படும் ஏழ்மையான நாடுகள் – எச்சரிக்கும் WHO அமைப்பு!

USAID-இன் 90% வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களை நிறுத்துவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு, உலகின் சில ஏழ்மையான சமூகங்களில் பேரழிவு ஏற்படும் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகளை எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் இந்த மாதம் மலேரியா சீசன் தொடங்குகின்ற நிலையில் ட்ரம்பின் அறிவிப்பானது மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உகாண்டாவின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்தை நடத்தும் டாக்டர் ஜிம்மி ஓபிகோ, ஜனவரி மாத இறுதியில் USAID வெளியிட்ட வேலை நிறுத்த உத்தரவுகள் அவரையும் மற்றவர்களையும் “பேரிடர் தயார்நிலையில் கவனம் செலுத்த வைத்தன” என்று கூறியுள்ளார்.
ஆப்பிரிக்காவில் மலேரியா எதிர்ப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா முதன்மையான இருதரப்பு நிதியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)