தயாரிப்பாளர் போட்ட ஸ்கெட்ச் சொதப்பியதால் தப்பித்த இளம் ஹீரோ

இந்த நடிகர் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும்போதே ஸ்டார் தான். சினிமாவில் அவருக்கு எந்த பின்புலமும் இல்லை என்றாலும், அவருக்கு கிடைத்த தொலைக்காட்சி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதன் மூலம் தனக்கான ரசிகர்களை வளர்த்துக் கொண்டவர் இவர்.
இப்படி இருக்கையில் இவருக்கு கிடைத்த சினிமா வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதை தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர் இவர். நன்றாக வளர்ந்து வரும் இந்த நடிகருக்கு ஒரு தயாரிப்பாளர் போட்ட ஸ்கெட்ச் அவரை டரியல் ஆக்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
அதாவது நடிகர் இப்போது கமிட் ஆகியுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஒரு பெரும் அரசியல் புள்ளிக்கு மிகவும் வேண்டப்பட்டவராக உள்ளார். இப்படி இருக்கையில் திரைத்துறையில் இருந்து ஒரு மாஸ் நடிகர் அரசியலில் கால் பதித்துள்ளார்.
தான் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிப்பேன் என சூளுரை ஆற்றி வருகிறார் அந்த நடிகர். இப்படி இருக்கையில் அந்த நடிகரின் படம் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகவுள்ளது.
இப்படி இருக்கையில் அரசியல் புள்ளிக்கு நெருக்கமான தயாரிப்பாளர் தயாரித்து வரும் இந்த இளம் நடிகர் நடித்து வரும் படத்தை, மாஸ் நடிகரின் படத்துக்கு எதிராக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
இதைக் கேள்விப்பட்டதும் இந்த இளம் நடிகருக்கு டரியல் ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், உங்க போதைக்கு நான் ஊறுகாயா என்று அவர் புலம்பும் அளவுக்கு கொண்டு சேர்த்துவிட்டது.
தயாரிப்பாளரிடம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது தொடர்பாக எந்தவிதமான கோரிக்கையையும் வைக்க முடியாது. இப்படி இருக்கும்போது, அரசியல் தளத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால், இந்த தயாரிப்பாளரின் வீட்டிற்கு ரெய்டு வர, இளம் நடிகரின் படத்தை தயாரிப்பதில் சில மாதங்கள் சிக்கல் ஏற்பட்டது.
இந்த சில மாத கால இடைவெளி என்பது, படத்தை மாஸ் நடிகரின் படத்துக்கு எதிராக ரிலீஸ் செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இப்போதுதான் இந்த இளம் நடிகர் மிகவும் நிம்மதியாக இருக்கிறாராம். ஏற்கனவே ரிலீஸ் தேதியை மாற்றுங்கள் என்று சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இருந்த நடிகர் இப்போது தனது உற்சாகத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் நெருங்கிய வட்டத்தில், ” அவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா மாறிடுதுடா” என பேசி வருகிறாராம்.