ஜனாதிபதி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்த போலந்து பொலிஸார்
வார்சாவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் துணை உள்துறை அமைச்சரை போலந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு அலுவலகத்திற்கு தலைமை தாங்கிய போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக மாரியஸ் கமின்ஸ்கி மற்றும் மசீஜ் வாசிக் ஆகிய இருவருக்கும் கடந்த மாதம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கைதுகளைத் தொடர்ந்து, புதிய உள்துறை மந்திரி மார்சின் கியர்வின்ஸ்கி X இல் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்.” என பதிவிட்டுள்ளார்.
சட்டம் மற்றும் நீதி (PiS) கட்சிக்கும் புதிய ஐரோப்பிய சார்பு கூட்டணிக்கும் இடையிலான அரசியல் கொந்தளிப்பை இந்த கைதுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த ஜோடியின் பாராளுமன்ற ஆணைகள் பறிக்கப்பட்டன, ஆனால் அவர்களும் ஜனாதிபதி டுடாவும் மன்னிப்பின் காரணமாக சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.