மத்திய கிழக்கு போர் மேலும் உக்கிரமடையும்: போலந்து பிரதமர் எச்சரிக்கை!
மத்திய கிழக்கின் போர்ச்சூழல் மேலும் மோசமடையக்கூடும் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் Donald Tusk எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது நட்பு நாடுகளிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், இப்பகுதியில் வரும் நாட்களில் அமைதி திரும்புவது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைப் போக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வரப்போகும் மாற்றங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தச் சாத்தியமான மோதல்கள் குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.




