டென்மார்க் பிரதமரை தாக்கிய போலந்து நபருக்கு 4 மாதங்கள் சிறைத்தண்டனை

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனை தாக்கியதில் போலந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார்.
தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனையும், நாடுகடத்தலும், டென்மார்க்கிற்குள் நுழைய ஐந்தாண்டுகள் தடையும் விதித்தது.
39 வயதான, பெயர் வெளியிடப்படாத நபர், நீதிமன்றத்தில், அதிகமாக குடித்து இருந்ததால் என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை என தெரிவித்தார்.
ஜூன் மாதம் நகரத்தில் ஒரு சதுக்கத்தில் நடந்த மோதலின் போது பிரதமர் ஃபிரடெரிக்சன் தோளில் குத்தியதில் சிறு காயங்களுக்கு ஆளானார்.
(Visited 10 times, 1 visits today)