இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நாட்களில், மக்கள் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் முடிந்தவரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவதைக் காணலாம்.
இதேவேளை, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, புத்தாண்டு காலத்தில் கொள்வனவு செய்யும் மக்கள் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
அங்கு, திருடர்கள் மற்றும் கொள்ளையர்களிடம் கவனமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருப்பதால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குமாறு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை பேணுவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் உரையாற்றினார்.