செய்தி

ரொரன்றோவில் மாயமான குழந்தை தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவின் ரொரன்றோவில் ஐந்து நாட்களாக காணாமல் போயிருந்த நான்கு வயது குழந்தை கிடைத்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

மார்க்கம் சாலை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த நபர் ஒருவருடன், ஒரு நான்கு வயது குழந்தையும் வாழ்ந்துவந்துள்ளது.திங்கட்கிழமை மதியம் பொலிஸார் அந்த வீட்டுக்கு அழைக்கப்பட்டார்கள். அப்போது, அந்த நபர் இறந்துகிடப்பதை பொலிஸார் கண்டுள்ளார்கள். ஆனால், அவருடன் இருந்த அந்த குழந்தையை வீட்டில் காணவில்லை.

குழந்தையை யாராவது கடத்தியிருக்கலாம் என கருதிய பொலிஸார் அவளைக் கண்டுபிடிப்பதற்காக ஆம்பர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில், தற்போது, அந்தக் குழந்தை கிடைத்துவிட்டதாகவும், அவள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதாவது, உயிரிழந்த அந்த நபர், உயிரிழக்கும் முன், தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதையடுத்து, அந்தக் குழந்தையை பத்திரமாக வேறொரு குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளார்.

குழந்தை கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து, அவள் தொடர்பில் விடுக்கப்பட்டிருந்த ஆம்பர் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி