இலங்கை

இலங்கையில் பரப்பை ஏற்படுத்திய சம்பவம்: வெளியான உயிரிழந்த இரு மாணவர்களின் சிசிடிவி காணொளிகள்!

இலங்கையில் நேற்று கொம்பனித்தீவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மாணவன் மற்றும் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மாலை அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து விழுந்து 15 வயதுடைய ஒரு சிறுவனும் சிறுமியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் தரம் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் எனவும் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு பாடசாலை மாணவர்களும் பாடசாலை முடிந்ததும் அடுக்குமாடி குடியிருப்பின் 5 வது மாடியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றுள்ளனர், அங்கு அவர்கள் ஆடைகளை மாற்றிக்கொண்டு உடமைகளை விட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் ஜிம்மிற்கு வெளியே படிக்கட்டு வழியாக கட்டிடத்தின் 67வது மாடியை அடைந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

70 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும், அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்