குற்றவாளியை கைது செய்ய இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி – திருகோணமலையில் சம்பவம்!
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, முறைப்பாட்டாளரிடம் பத்தாயிரம் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீன் வியாபாரி மூலம் லஞ்சம் பெற முயன்றபோது பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டாளரிடம் கோரப்பட்ட லஞ்சப் பணம், கிண்ணியாவின் மீன் சந்தை நடத்தும் சந்தேக நபரின் நண்பர் மூலம் பெறப்பட்டதுடன் அந்த நண்பர் பணத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சப்-இன்ஸ்பெக்டர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.





