முல்லைத்தீவில் டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

முல்லைத்தீவு – கற்சிலைமடுவில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மாங்குளம் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி பயணித்த குறித்த டிப்பர் வாகனமானது, பொலிஸாரின் சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த டிப்பர் வாகனம் சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைக்காது தொடர்ந்து பயணித்தமையினால் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் துரத்திப் பிடிக்கப்பட்டு கற்சிலைமடுவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது டிப்பர் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த இச்சோதனை நடவடிக்கையில் எதுவிதமான சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 27 times, 1 visits today)