செய்தி

லண்டன் முழுவதும் அவசர சேவைகளுக்கு பதிலளிக்க ட்ரோன்களை அனுப்பும் காவல்துறை!

பிரித்தானியா – லண்டன் முழுவதும் அவசர தொலைபேசிகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் சம்பவ இடத்திற்கு ட்ரோன்களை அனுப்பும் முன்னோடி திட்டம் இன்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் (cameras) நேரடி காட்சிகளை ஸ்ட்ரீமிங் (streaming) செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொலைதூர கட்டடத்தில் ஏதேனும் ஒரு குற்றச்செயல் இட்பெற்றால் அதனை இனங்காண இலகுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி விரைவான உளவுத்துறையை வழங்குதல், காணாமல் போனவர்களின் விசாரணைகளுக்கு உதவுதல், சந்தேக நபர்களைக் கண்காணித்தல் மற்றும் பெரிய சம்பவங்களின் போது அவசர சேவைகளை வழிநடத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பத்தில் இஸ்லிங்டனில் (Islington) தொடங்கப்பட்டது, இந்த ஆண்டு இறுதிக்குள் வெஸ்ட் எண்ட் (West End) மற்றும் ஹைட் பார்க்கிற்கு (Hyde Park) விரிவுபடுத்தப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் காவல்துறை வளங்கள் குற்றச் சம்பவங்களுக்கு விரைவாகச் செல்லவும், சந்தேக நபர்களைக் கண்டறியவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், முக்கிய உளவுத்துறையை வழங்கவும் உதவும் என்று உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர் (Laurence Taylor ) தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!