இலங்கை

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை!

திருமணமாகாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபா நட்டஈடு மற்றும் குற்றவாளிக்கு 20,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று (14) குற்றவாளிக்கு உத்தரவிட்டார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய லக்ஷ்மன் சாலிய பண்டார விரசிங்க என்பவருக்கே குறித்த அபராதம் மற்றும் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனையுடன், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீட்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹைஃபாரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டே அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டின் கீழ், பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்திய பொலிஸ் திணைக்களம் ஆரம்ப விசாரணையின் பின்னர், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளினால் சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டை பரிசீலித்து, அதே பொலிஸ் நிலையத்தின் சேவைக்கு அமர்த்தப்பட்டார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!