வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக இன்று யாழ் போதனா வைத்தியசாலை அத்தியட்சகர் எஸ்.சத்திய மூர்த்தி யாழ் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் அரச போதனா இன்று பலாத்காரமாக நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள் ஊழியர்களின் கடமைக்கு இடையூறாக செயல் பட்டதாகவும் தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இவ்விடயமாக தாம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.
(Visited 1 times, 1 visits today)