பிரான்சில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் கைது
பரிசில் உள்ள மிகவும் நெருக்கடியான தொடருந்து நிலையமான Gare de Lyon இற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் ஒக்டோபர் 19 ஆம் திகதியன்று குறித்த நிலையத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
அதையடுத்து தொடருந்து நிலையத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, சேவைகள் நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு அகற்றும் படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்தனர். பின்னர் அது ஒரு போலி அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு 1500 யூரோக்கள் குற்றப்பணமும், தொடருந்து சேவைகள் தடை செய்திருந்தமைக்கான இழப்பீடாக 150,000 யூரோக்கள் நஷ்ட்ட ஈடும் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)