இந்தியா

மணிப்பூர் மாநில தினத்திற்கு பிரதமர் வாழ்த்து: கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்

இந்த ஆண்டு திரிபுரா, மேகாலயா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் 52வது மாநில தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

மூன்று வடகிழக்கு மாநிலங்கள் 1972 இல் வடகிழக்கு பிராந்திய மறுசீரமைப்புச் சட்டம், 1971 இன் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக மாறியது.

மணிப்பூரின் மாநில தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“திரிபுரா மக்களுக்கு மாநில தினத்தில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த நாள் மாநிலத்தின் தனித்துவமான வரலாறு மற்றும் வளமான பாரம்பரியத்தை கொண்டாடட்டும். திரிபுரா மக்களுக்கு செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை வாழ்த்துகிறேன். மேகாலயா மக்களுக்கு மாநில தின வாழ்த்துக்கள்! இன்று ஒரு சந்தர்ப்பம்! மேகாலயாவின் நம்பமுடியாத கலாச்சாரத்தையும், அங்குள்ள மக்களின் சாதனைகளையும் கொண்டாடுங்கள். வரும் காலங்களில் மேகாலயா முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டட்டும்” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூரின் மாநில தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மாநிலம் வலுவான பங்களிப்பைச் செய்துள்ளது என்றார்.

“மணிப்பூர் மாநில தினத்தில், மாநில மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மணிப்பூர் வலுவான பங்களிப்பைச் செய்துள்ளது. மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மணிப்பூரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘மணிப்பூரின் மாநில தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க நேரமுள்ள பிரதமருக்கு, அங்கு செல்லவோ. அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கவோ நேரமில்லை’ என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

‘மக்களின் இன்னல்கள் இன்னும் தொடர்கின்றன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. சமூக நல்லிணக்கம் குலைந்துள்ளது. ஆனால் பிரதமர் மணிப்பூர் பற்றி மௌனம் மட்டுமே சாதிக்கிறார். மாநிலத்தின் அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் சந்திப்பதைத் தவிர்த்துவருகிறார்.’ எனக் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!