ஆஸ்திரேலியாவில் நீரில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : மூவர் மாயம்!
ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவில் உள்ள தாம்சன் விரிகுடாவிற்கு அருகே விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மூவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல்போனவர்களை தேடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீர் போலீசார் மற்றும் இரண்டு ஆர்ஏசி ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணங்களை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)