காங்கோவில் தீப்பிடித்து எரிந்த விமானம்! அமைச்சரின் நிலை குறித்து வெளியான தகவல்!
காங்கோ ஜனநாயகக் குடியரசின் சுரங்க அமைச்சரை ஏற்றிச் சென்ற விமானம் நேற்று விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த நேரத்தில் அமைச்சர் லூயிஸ் வாதும் கபாம்பா ( Louis Watum Kabamba) மற்றும் 19 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தலைநகர் கின்ஷாசா (Kinshasa) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், லுவாலாபா மாகாணத்தில் உள்ள கோல்வேசி விமான நிலையத்தில் (Kolwezi Airport) தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
விபத்தை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் இதில் பயணிகளின் சாமான்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதி சேதமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)




