உலகம்

ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை விதிக்கத் திட்டம்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது திருநங்கைகள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு ஆலோசித்து வருகிறது.

2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் திருநங்கைப் போட்டியாளர்கள் பங்கேற்க முழுமையாகத் தடை விதிப்பது குறித்து ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள்.

ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரியின் (Kirsty Coventry) தலைமையில் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

திருநங்கைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் அதனைத் தவிர்ப்பது அநாவசியமான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என ஒலிம்பிக் குழு முடிவு செய்துள்ளது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில், திருநங்கைகள் விளையாடுவதைத் தடுக்கும் வகையிலான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!