ஐரோப்பா

டெக்சாஸில் புறப்பட்ட தயாரான நிலையில் கைது செய்யப்பட்ட விமானி : பயணிகள் அவதி!

ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் புறப்படுவதற்கு சற்று முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.  இதனால் திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

45 வயதான சீமோர் வாக்கர் என அடையாளம் காணப்பட்ட விமானி,  குடும்ப வன்முறைக்காக நிலுவையில் உள்ள வாரண்டின் பேரில் ஹூஸ்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் வாக்கர் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்ட அமலாக்கப் பிரிவினர் கைது செய்வதற்கான நேரத்தை தந்திரோபாயமாக நிர்ணயித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் திடீரென மாற்று பணியாளர்கள் இல்லாததால், விமானத்தை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!