நெதர்லாந்தில் நடந்த கோர விபத்தில் – ஒருவர் உயிரிழப்பு
 
																																		ஆம்ஸ்டர்டாம் Schiphol விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தின் ஜெட் என்ஜின் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை பிற்பகல் KL1341 என்ற விமானம் டென்மார்க்கின் Billund நகருக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெதர்லாந்து இராணுவப் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் மற்றும் ரோயல் நெதர்லாந்து மரேச்சௌசி விமானத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக X இல் குறிப்பை வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
