ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என ஆசைப்படும் மக்கள்!
கனேடிய வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என விரும்புவதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய ஐந்தில் மூன்றுபேர் தேர்தலை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையானவர்கள், 59 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு வாக்கெடுப்பை எதிர்பார்க்கிறார்கள், 69 சதவீதம் பேர் அடுத்த கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்பு ட்ரூடோ பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சமீப வாரங்களில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை இரட்டை இலக்க வித்தியாசத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)





