இங்கிலாந்தில் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசைகள் – தகுதி விரிவாக்கத்தால் கடும் நெரிசல்
இங்கிலாந்தின் ஆஷ்ஃபோர்ட் (Ashford) பகுதியில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு வெளியே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக விகாரேஜ் லேன் கிளினிக் (Vicarage Lane Clinic) முன்பு அதிக நெரிசல் காணப்படுகிறது.
அரசாங்கம் தடுப்பூசி பெற தகுதியானவர்களின் பட்டியலை விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து, கேன்டர்பரி (Canterbury) பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
இதனால் மையங்களுக்கு மக்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
சில இடங்களில், மக்கள் பல மணி நேரங்களுக்கு முன்பே வரிசையில் நின்று காத்திருக்கின்றனர்.
இதனிடையே, வியாழக்கிழமை கென்ட் பல்கலைக்கழகம் (University of Kent) வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மாலை 5 மணிக்குள் அனைவருக்கும் சேவை வழங்க முடியாத அளவுக்கு வரிசை நீளமாக இருந்தமை இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மூளைக்காய்ச்சல் காரணமாக கென்ட் பகுதி முழுவதும் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறக்கப்படவுள்ளன.





