உடற்பருமனால் போராடும் மக்கள் – விளக்கத்தை மாற்றியமைக்க முயற்சியில் நிபுணர்கள்
உலகில் தற்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உடற்பருமனாக உள்ள நிலையில் உடற்பருமனைத் தீர்மானிக்கும் வழியை மாற்ற நிபுணர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உலகெங்கும் மருத்துவர்கள் தற்போது Body Mass Index (BMI) எனும் உடல் எடையையும் உயரத்தையும் வைத்து உடற்பருமனைக் கண்டறிகின்றனர்.
எனினும் அது மட்டும் போதாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோய்கள், ஒருவரின் இடுப்பளவு போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
56 நிபுணர்களும் 76 மருத்துவ அமைப்புகளும் ஆதரவளிக்கும் கட்டமைப்பைப் பற்றி The Lancet Diabetes and Endocrinology சஞ்சிகை தகவல் வெளியிட்டது.
உடற்பருமன் இரண்டு வகையாகப் பிரிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மிதமிஞ்சிய கொழுப்புடன் மூச்சுத் திணறல், இருதயக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களை ஒரு பிரிவிலும் பிரச்சினை இல்லாதவர்களை ஒரு பிரிவிலும் வகைப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது..
உடற்பருமனைத் துல்லியமாக அடையாளம் காணும்போது தனிநபர்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்பதைச் சரியாகத் தீர்மானிக்கமுடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.