AI ஆல் தொழில்களை இழக்கும் மக்கள் : மஸ்க் முன்வைக்கும் தீர்வு!
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI) இறுதியில் அனைத்து வேலைகளையும் நீக்கிவிடும் என்று கூறியுள்ளார்.
ஆனால் இது ஒரு மோசமான வளர்ச்சியல்ல என்று அவர் நம்புவதாக கூறப்படுகிறது.
பாரிஸில் ஸ்டார்ட்அப் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நீங்கள் ஒரு பொழுதுபோக்காக ஒரு வேலையைச் செய்ய விரும்பினால், நீங்கள் ஒரு வேலையைச் செய்யலாம்.
ஆனால் AI தொழில்நுட்பம் நீங்கள் கேட்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வேலைகள் இல்லாத எதிர்காலத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக நிறைவடைந்திருப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சூழ்நிலை வெற்றிபெற, “உலகளாவிய உயர் வருமானம்” இருக்க வேண்டும் என்று மஸ்க் எடுத்துரைத்தார்.
அதாவது யுனிவர்சல் அடிப்படை வருமானம் (UBI) அவசியம் எனக் கூறுகிறார். அரசாங்கமானது தனது தனிப்பட்ட வருமானத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் வழங்குவதைக் அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.