மக்கள் ஜோம்பிஸ் போல் தெரிந்தார்கள் : துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் வாக்குமூலம்!

டென்மார்க்கில் கடந்த ஆண்டு ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவத்தை மேற்கொண்ட 23 வயதான இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜோம்பிஸ் போல் தெரிந்ததாகவும், அதனாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து அவரை பாதுகாப்பான மருத்துவ வசதியின் கீழ் தடுப்புகாவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோபன்ஹேகனின் புறநகர்ப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் ஜூலை 3, 2022 அன்று மிகப் பெரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்றது. இதில் மூவர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்திருந்தனர்.
(Visited 9 times, 1 visits today)