இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள் – கடவுசீட்டு பெற குவியும் விண்ணப்பங்கள்

இலங்கையில் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான நடைமுறை 51 பிரதேச செயலகங்களில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது

அதற்கமைய, ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 29,578 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 24,285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

ஒரு நாள் சேவையின் மூலம் 5,294 பேர் சமர்ப்பித்துள்ளதாகவும், பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பிரதேச செயலகங்களினால் ஒன்லைன் முறையின் ஊடாக வழங்கும் வேலைத்திட்டம் கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்