ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபரால் மகிழ்ச்சியில் மக்கள்
ஜெர்மனியில் மக்களுக்கு பல்வேறு விதமான நெருக்கடியை ஏற்படுத்திய வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளது.
லாண்டாவ் பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு, போதைப்பொருள் குற்றங்கள், அத்துமீறல் மற்றும் கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் தண்டனைகளை எதிர்கொண்ட சோமாலிய நாட்டு அகதியே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
லாண்டவ் லேண்ட் பகுதியில் 512 பேர் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் நபராக நாடு கடத்தப்பட்ட நபர் செயற்பட்டுள்ளார்.
குறித்த நபர் நாடு கடத்தப்பட்டதனையடுத்து அந்தப் பகுதி குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பெண்கள் அச்சமின்றி இரவு நேரங்களில் வீட்டிலிருந்து வெளியேற முடியும் என பலர் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்த குறித்த நபர் தண்டனைக்கு பின்னர் மீண்டும் மது அருந்திய நிலையில் மீண்டும் குடியிருப்பாளர்களை மிரட்டியதாக தெரியவந்துள்ளது.
2013 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் குறித்த நபருக்கு 2018 ஆம் ஆண்டு புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.