உலகம் முக்கிய செய்திகள்

இன்று வானில் ஏற்படும் அரிதாக நிகழ்வு – வெற்று கண்களால் பார்க்கலாம்

இன்று புறநிழல் சந்திரகிரகணம் நிகழ இருப்பதாகவும் இது ஒரு அரிதான நிகழ்வு எனவும் நாசா தகவல் வெளியிட்டு இருக்கிறது.

இந்தக் கிரகணத்தை வெற்று கண்களால் பார்க்க முடியும் எனவும் இலங்கை – இந்திய நேரப்படி இரவு 8:44 முதல் அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் என்றும் நான் சா தெரிவித்து இருக்கிறது.

பொதுவாக சந்திர கிரகணம் என்பது முழு நிலவின் போது மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வாகும். பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும்.

இந்த நிகழ்வால் சந்திரனாள் பிரதிபலிக்கும் சூரிய ஒளியானது மறைக்கப்படுகிறது. இதுவே முழு சந்திர கிரகணம் ஆகும். ஆனால் இந்தப் புற நிழல் சந்திர கிரகணமானது பாரம்பரிய சந்திர கிரகணத்திலிருந்து மாறுபடுகிறது.

தெளிவான வானத்துடன் இருக்கும் நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தெரியும் என நாசா அறிவித்திருக்கிறது. இந்த சந்திர கிரகணம் ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியிலும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் தெரியும் என நாசா அறிவித்திருக்கிறது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
error: Content is protected !!