பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தை அங்கீகரித்த பென்டகன்!
பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி 15 ஆண்டுகளுக்குள் குறைந்தது மூன்று வர்ஜீனியா வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்வனவு செய்யப்படும்.
டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்படி ஒப்பந்தத்தை பரீசிலனை செய்திருந்த நிலையில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஒப்பந்தமானது அமெரிக்காவிற்கே முன்னுரிமை என்ற ட்ரம்பின் திட்டத்துடன் ஒத்துப்போவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021 AUKUS ஒப்பந்தம் இப்போது மூன்று நாடுகளிலும் மூன்று அரசாங்க மாற்றங்களைத் தாண்டி இன்னும் வலுவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





