பிரித்தானியாவில் குறைக்கப்படும் ஓய்வூதியதாரர்கள் : வரிகளும் உயர்வு!
சாத்தியமான வரி உயர்வு மற்றும் வேலைச் சந்தை சீர்திருத்தங்கள் பற்றிய தொழிலாளர் கட்சியின் பரிந்துறைகள் இங்கிலாந்து பொருளாதாரத்தில் “கோடைகால நம்பிக்கையை” முறியடிக்கக்கூடும் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
தொழிற்கட்சி ஆட்சியமைத்ததில் இருந்து பிரதம மந்திரி சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அதிபர் ரேச்சல் ரீவ்ஸ் இருவரும் பிரிட்டனின் நிதி குறித்த இருண்ட மதிப்பீட்டில் ஒன்றுபட்டுள்ளனர்.
நாட்டின் கஜானாவில் “£22 பில்லியன் கருந்துளை” இருப்பதாக மேற்கோள் காட்டி குற்றம் சுமத்தியியுள்ளனர். இது டோரிகளால் ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் முதலீடுகள் மீதான வரி உயர்வு அஞ்சும் நிலையில், அக்டோபரில் வரவிருக்கும் “வலி மிகுந்த” பட்ஜெட் குறித்து பிரதமர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளில் ஆண்டுக்கு £300 வரை பெறக்கூடிய ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கும் அவர்களது முதலாளிகளுக்கும் இடையே உள்ள உடன்பாட்டிற்கு உட்பட்டு, அதே ஊதியத்துடன் வேலை வாரத்தை நான்கு நாட்களுக்கு குறைக்கும் திட்டங்களையும் லேபர் அறிவித்தது.
இந்நிலையில் இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் (IoD) இன் தலைமைப் பொருளாதார நிபுணர் அன்னா லீச், வேலை உருவாக்கம் மற்றும் வரிகள் பற்றிய கவலைகள், பொருளாதாரத்தின் மீதான எந்த ஆரம்ப நம்பிக்கையும் இப்போது “கோடை காலத்தில் துண்டிக்கப்பட்டுவிட்டன” என்று கூறியுள்ளார்.