தென்னாப்பிரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்துக்கு காரணமாகிய பெங்குவின்

தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 19ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்துக்கு பெங்குவின் காரணம் என்று தெரியவந்துள்ளது.
ஈஸ்ட்டன் கேப் வட்டாரத்தில் Gqeberha எனும் தீவைப் பற்றிய தரவு வான்வழி சேகரிக்கப்பட்டது. அப்போது ஒரு பெங்குவினை இன்னொரு இடத்துக்கு மாற்ற ஹெலிகொப்டர் விமானிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக்கொண்ட விமானி பெங்குவினை ஒரு பெட்டியில் வைத்து தமக்கு அருகே உள்ள இருக்கையில் வைத்தார். பெட்டி இருக்கையிலிருந்து விழாமல் இருக்க விமானி வேறு எதையும் பயன்படுத்தவில்லை.
ஹெலிகொப்டர் புறப்பட்டபோது இருக்கையிலிருந்து நகர்ந்த பெட்டி ஹெலிகொப்டரின் இயக்கக் கருவிகள் மீது விழுந்தது.
விமானி கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. விமானியோ, பயணிகளோ காயமடையவில்லை. பெங்குவினும் நலமாக இருந்தது.
ஹெலிகாப்டருக்கு மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. பெங்குவினை முறையாக வைக்காததால் ஆபத்து ஏற்பட்டது என்று தென்னாப்பிரிக்க சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.