தாய்லாந்து, கம்போடியாவில் அமைதி திரும்பும் – நம்பிக்கையில் ட்ரம்ப்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா பிரதமர்கள் சண்டையை நிறுத்துவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் இட்டுள்ள பதவில், இரு தலைவர்களும் “இன்று மாலையில் அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும் நிறுத்தவும், என்னுடன் செய்து கொண்ட அசல் அமைதி ஒப்பந்தத்திற்குத் திரும்பவும் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
எல்லையில் நடந்த பதற்றம் காரணமாக சமீககாலத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்திய மோதல் தொடர்பில் இருநாட்டு தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாற்றிய அவர், போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் ட்ரம்பின் இந்த கூற்று தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக தாய் பிரதமர், கம்போடியா துப்பாக்கிச் சூட்டை நிறுத்தினால், அதன் துருப்புக்களை திரும்பப் பெற்றால், அது புதைத்துள்ள அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்றினால்” மட்டுமே போர்நிறுத்தம் ஏற்படும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





