காசாவை மீண்டும் கட்டியெழுப்ப ட்ரம்ப் தலைமையில் உதயமாகும் அமைதி வாரியம்!
காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும், புதிய நிர்வாகத்திற்கு மாறுவதையும் மேற்பார்வையிட “அமைதி வாரியம்” ஒன்றை அமைப்பதாக வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுத்த வாரிய உறுப்பினர்களில் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio), ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் (Tony Blair) ஆகியோர் அடங்குவர்.
இந்த வாரியத்திற்கு ட்ரம்ப் தலைவராக பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரும் வாரங்களில் மேலதிக அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு உறுப்பினரும் “காசாவின் நிலைப்படுத்தல் மற்றும் நீண்டகால வெற்றிக்கு முக்கியமான வரையறுக்கப்பட்ட இலாகாவை மேற்பார்வையிடுவார்கள்.
இதில் நிர்வாகத் திறன் மேம்பாடு, பிராந்திய உறவுகள், புனரமைப்பு, முதலீட்டு ஈர்ப்பு, பெரிய அளவிலான நிதி மற்றும் மூலதனத் திரட்டல் ஆகியவை அடங்கும் எனவும் கூறப்படுகிறது.





