ஐரோப்பா

கிழக்கு ஏஜியன் கடற்பரப்பில் படகுடன் மோதிய ரோந்து கப்பல் – 14 பேர் பலி!

கிழக்கு ஏஜியன் தீவான சியோஸுக்கு  (eastern Aegean island) அருகில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற வேகப் படகும் கிரேக்க கடலோர காவல்படையின் ரோந்து கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

24  புலம்பெயர்ந்தோர் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக சியோஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன்  வேகப் படகில் இருந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், பலர் காணாமல்போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரோந்து படகுகள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் டைவர்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!