இலங்கை செய்தி

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் பிள்ளைகள் நாடு திரும்பினர்

தற்போது வெளிநாட்டில் உள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று அவர்கள் இந்த நாட்டை வந்தடைந்துள்ளனர்.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எவ்வாறாயினும், தான் இலங்கை திரும்புவேன் என சிங்கப்பூரில் இருந்து தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் கூறியது போல் இலங்கைக்கு வரவில்லை எனவும் அவர் தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் வேளையில் அவர் சார்பாக சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!