Ryanair விமானத்தில் பயணியால் ஏற்பட்ட பதற்றம் – 40 நிமிடம் தாமதமாக புறப்பட்ட விமானம்!
ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் என்று கூறிக்கொண்ட ஒரு பயணி ஒருவர் ரயன் எயார் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நிலையில் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அடையாளம் தெரியாத நபர் தனது அந்தஸ்து காரணமாக முன் வரிசை இருக்கை இருப்பதாக வலியுறுத்தியதாகவும், பின்னர் தனது போர்டிங் கார்டை விமான பணிப்பெண்களிடம் காட்ட மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் இறுதியில் அவரை வரிசையில் இருந்து வெளியே இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அவர் தனது இருக்கையிலிருந்து இறங்க மறுப்பதை காணொளிகள் காட்டுகின்றன.
போலீசாருடனான மோதலின் போது, ”நான் பயணத்திற்கு பணம் செலுத்தியுள்ளேன்” என்றும், பின்னர் “நான் இதை ஏற்கப் போவதில்லை” என்றும் அவர் கூறுவதைக் கேட்க முடிகிறது. பின்னர் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனால் விமானம் மொத்தம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டதாக தெரியவருகிறது.