உலகம் செய்தி

ஹொங்கொங்கிற்குச் சென்ற விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த பயணி

டாக்காவிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்று கொண்டிருந்த Cathay Pacific விமானத்தில் மயங்கி விழுந்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 47 வயதுடைய பங்களாதேஷ் நாட்டவராகும். விமானம் ஹொங்கொங்கில் தரையிறங்கியபோது அவர் மயங்கி விழுந்தார்.

அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால் அது பலன் தரவில்லை எனவும் அவரது மரணத்திற்கான காரணம் விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது இந்த மாதத்தில் (செப்டம்பர் 2024) Cathay Pacific விமானத்தில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவமாகும்.

இதற்குமுன்னர் செப்டம்பர் 8ஆம் தேதி ஹொங்கொங்கிலிருந்து மும்பைக்குச் சென்ற Cathay Pacific விமானத்தில் ஜெர்மானியப் பயணி ஒருவர் மயங்கி விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி