கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட பயணி கைது

சுமார் 2 லட்சத்து 50 லட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 35 வயதான இந்திய தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-315 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதியில் இருந்த புடவை சுமைக்கு மத்தியில் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளை கைது செய்துள்ளனர்.
(Visited 39 times, 1 visits today)