4.5 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற பயணி கட்டுநாயக்காவில் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில், 4.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடைய புத்தளம், கல்பிட்டியைச் சேர்ந்த மீனவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை 05.25 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
சோதனையின் போது, அதிகாரிகள் இரண்டு பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கொண்ட 150 அட்டைப் பெட்டிகளைக் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளுடன், 2025 அக்டோபர் 08 அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.





