பாரிஸ் ஒலிம்பிக் – ஒரே இரவில் எடையை குறைக்க முற்பட்ட இந்திய வீராங்கனைக்கு நேர்ந்த கதி
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்ற இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக பாரிஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வினேஷ் போகத் இரவு முழுவதும் உடல் எடையைக் குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்ட காரணத்தினால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பாரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் எடையைக் குறைப்பதற்காக தமது தலை மயிரை வெட்டிக்கொண்டதுடன், உடலில் இருந்து இரத்தையும் வெளியேற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக உள்ள காரணத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. குறித்த சம்பவம் இந்திய இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பதக்கத்தைப் பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தமது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.