உலகெங்கிலும் முடங்கிய தகவல் தொழில்நுட்ப சேவை : பல நிறுவனங்கள் பாதிப்பு!
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் திடீரென தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன. லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப செயலிழப்பிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவற்றை சீர் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
(Visited 61 times, 1 visits today)





