உலகம்

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட 112 பேர் – சுதந்திரம் அளிக்கும் பனாமா!

அமெரிக்காவிலிருந்து பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு உள்ளூரில் சுதந்திரமாக பயணிக்க அனுமதியளிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளி நாட்டவர்கள் சுமார் 112 பேர் மத்திய அமெரிக்க நாடான பனாமாவிற்கு அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்.

தாரியன் பகுதியிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் அனைவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் அனுமதி சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்பிராங்க் அப்ரெகோ தெரிவித்துள்ளார்.

இந்த அனுமதியின் மூலம் பெரும்பாலும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் பனாமா நாட்டிற்குள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் தங்குமிடங்களை தாங்களே தேர்வு செய்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் 30 நாள்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி சீட்டானது அவர்களது விருப்பத்திற்கேற்ப புதுப்பித்துக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடு கடத்தப்பட்ட மக்களின் கடவுச் சீட்டுக்களும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கடுமையான முறையில் நடத்தப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பனாமாவை விமர்சித்து வந்தனர். மேலும், அவர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்க சர்வதேச ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 50 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்