பாகிஸ்தானின் முடிவு மாறும்: அஸ்வின் நம்பிக்கை!
ICC T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நிச்சயம் நடைபெறும் என இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் Ravichandran Ashwin நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இந்தியாIndia -பாகிஸ்தான் Pakistan போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும்.
அடுத்த 4 அல்லது 5 தினங்களில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் என்று நான் நினைக்கிறேன். நானும் இந்தப்போட்டியை பார்க்க விரும்புகிறேன்.
பாகிஸ்தான் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். ஒளிபரப்பு நிறுவனம் பெரும் தொகையை இழப்பார்கள். எனவே ஒரு சமரசம் ஏற்பட்டாக வேண்டும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு ஐ.சி.சி. தடை விதிக்கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் பொதுவான மைதானத்தில் தான் மோதுகின்றன. எனவே மைதானம் குறித்த பிரச்சினை இல்லை.” என அஸ்வின் மேலும் குறிப்பிட்டார்.




