இந்திய எல்லைக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களால் பரபரப்பு!
இந்தியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள்மீது இந்திய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
அத்துடன், எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாகவே பாகிஸ்தான் ட்ரோன்கள் உள்நுழைய முற்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்திய எல்லைக்குள் பறந்த ட்ரோன்களை குறிவைத்து இந்திய இராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து ட்ரோன்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் சென்றன எனவும் அவர் கூறினார்.
‘‘ கடந்த மூன்று நாட்களாக ஜம்மு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.” – என்று இந்திய இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நவ்ஷேரா செக்டார் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட், சம்பா மாவட்டத்தின் ராம்கர் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
அதேவேளை, ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கின்றது. அத்துமீறல் தொடர்ந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





