உலகம்

ஆப்கானிஸ்தான் வைத்தியசாலைமீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 400 பேர் பலி

ஆப்கானிஸ்தான், காபூலில் உள்ள வைத்தியசாலைமீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 250 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவே (16) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா தெரிவித்துள்ளார்.

எனினும், மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தாங்கள் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் வைத்தியசாலை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற சூழலில், அண்மைய காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!