முத்தரப்பு T20 தொடர் – பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்ற 3வது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அந்தவகையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே(Janith Liyanage) 41 ஓட்டங்களும் குசல் பெரேரா(Kusal Perera) 25 ஓட்டங்களும் பெற்றனர்.
அதனை தொடர்ந்து, 129 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 131 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய சாஹிப்சடா பர்ஹான்(Sahibzada Farhan) 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், இந்த முத்தரப்பு தொடரில் இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்துள்ளதால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது.




